Thoduvanam
24*7 Verified Tamil News

சொல்லிலும், செயலிலும் நேர்மையை வெளிப்படுத்தாத தமிழ் தேசிய கட்சிகள்

வார்த்தைகளில் வீரங்களை பேசினால் அதை எப்பாடுபட்டாவது கடைப்பிடிக்கவேண்டும்.

தமிழ் தேசியம் பேசி வெற்றியடைந்த பிரதிநிதிகள் எல்லோரும் இந்த அரசாங்கத்தினை எதிர்க்கவேண்டும். அவர்கள் வெளிப்படையாக இந்த அரசாங்கத்திடமிருந்து தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்றே தேர்தல் மேடைகளில் முளங்கினார்கள்.

மக்களும் அரசாங்கத்தினை முழுமையாக எதிர்தே அந்த வாக்குகளை இவர்களுக்கு வழங்கினார்கள்.

வரவு செலவுத்திட்ட விவாதங்களில் தமிழ், முஸ்லீம் நாடாளுமன்ற உரைகள் மிகவும் உணர்ச்சி பூர்வமாகவும், விமர்சன ரீதியிலும் இருந்தது.

அவை அனைத்தும் அடுத்தநாள் ஊடகங்களுக்கு தலைப்புசெய்திகளாக மட்டுமே பேசப்பட்டவை என்பதை வாக்கேடுப்புக்களில் அவர்கள் நடந்துகொண்டதன் அடிப்படையில் புரிந்துகொள்ளமுடியும்.

குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு இந்த வரவு செலவுத்திட்டத்தில் எவ்வித விசேட சலுகைகளும் அறிவிக்கப்படவில்லை.

அதுபோன்று பொருளாதார ரீதியிலும் இந்த வரவு செலவுத்திட்டம் நாட்டிற்கு மிக அவசியமானதாக எந்தவொரு பொருளாதார நிபுணர்களும் கூறவில்லை.

நாடாளுமன்றில் வடக்குகிழக்கை சேர்ந்த தமிழ் தேசிய கட்சிகளின் உறுப்பினர்கள் அரசாங்கத்தினை விமர்சித்து உரையாற்றினார்கள்.

கொள்கைகள், அரசாங்கத்தின் போக்குகள்இ மாவீரர்நாள் போன்றவை எல்லாம் கூறி வெளுத்துவாங்கினார்கள். இறுதியாக சரியான சந்தர்பத்தில் வெளிநடப்பு செய்தார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற ஒரு கட்சி மட்டுமே எதிர்பை உரைகளிலும் பதிவு செய்துஇ வாக்கெடுப்புக்களிலும் பதிவு செய்தது. கூட்டமைப்பும்இ விக்கினேஷ்வரனும் எதிர்த்தார்கள் உரைகளில் ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை எதிர்க்க வேண்டிய சந்தர்ப்பமான வாக்கெடுப்பில் எதிர்க்கவில்லை.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால் வரவு செலவுத்திட்டம் நிறைவேறும் என்று தெரியும். ஆனாலும் நாடாளுமன்றில் எதிர்த்து உரையாற்றினால் இறுதி வாக்கெடுப்பிலும் எதிர்க்கவேண்டும் என்பதுதான் சிலருக்கு தெரியவில்லை.

வாக்கெடுப்பில் எதிர்க்கவில்லை என்றால் உரைகளில் எதிர்ப்பதன் ஊடாக எதனையும் சொல்லிவிடமுடியாது. நல்லெண்ண அடிப்படையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட அரசின் வரவுசெலவுதிட்டத்தை எதிர்கமுடியும்.

பெரும்பான்மை இல்லை என்றால்தான்நல்லெண்ண அடிப்படையில் கொரோனா காலத்தில் எதிர்க்காது விடவேண்டும். இதுதானே சரியாக இருக்கமுடியும். இல்லையேல் இது ஏதோ ஒரு நலனில் அந்த உரைகள் அடிபட்டுவிட்டது என்றுதான் எண்ணமுடியும்.

2010 இருந்து கூட்டமைப்பினை எதிர்க்கும் கயேந்திரகுமார் கூறிவருகின்ற முக்கியமான விடயம், கூட்டமைப்பு பேசுகின்ற கொள்கைக்கும் அது நடந்துகொள்ளுகின்ற விதமும் வேறுவேறானது.

குறிப்பாக கூட்டமைப்பு கொள்கையை விட்டு வெளியேறிவிட்டது. அதன்பின்னர் கூட்டமைப்பின் உள்ளகமுரண்பாடுகள் மூலம் வெளிவந்தவர்களும் அதனையே சொன்னார்கள்.

ஆனால் நீதியரசர் விக்கினேஸ்வரனும் கூட்டமைப்பின் பாணியில்தான் செல்வதனால் கூட்டமைப்பும்இ விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் இணைந்து பயனிக்கமுடியும்.

தமிழ் மக்கள் இந்த ஐந்து வருடங்களும் ஏமாற்றப்பட போகின்றார்கள் என்பதற்கு இந்த வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பு நல்ல உதாரணம்.

இன்றைய நிலையில் கொள்கை வழியில் உரைஇ பொறுப்புகூறலில் விட்டுக்கொடுப்பற்ற நிதானமான நிலையில் அரசியலை நகர்த்தல், செயல்வடிவில் கொள்கையினை பலப்படுத்தும் முறமையுள்ள கட்சி என்றால் அது தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே!

கொள்கைவழியில் தெளிவில்லாது அல்லது கொள்கையில் நம்பிக்கை இல்லாது இருக்கும் கட்சிகளை ஒருங்கினைத்து மீண்டும் தமிழ் மக்களை ஏமாத்ததான் முடியும். அவை சொல்லிலும் செயலிலும் உண்மையாகவும், நேர்மையாகவும் எப்படி இருப்பார்கள் என நம்புவது?

இனி ஒற்றுமை தமிழ் கட்சிகளுக்கு தேவை என்று பார்ப்பதை விட, தமிழ் மக்களுக்கே ஒற்றுமை தேவை என்ற நிலையில் இன்றைய அரசியலை பார்ப்பது நல்லதாக அமையும் என நினைக்கின்றேன். சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடுள்ள கட்சிகளிடம் ஒற்றுமையை ஏற்ப்படுத்தி என்ன பயன்?.

அதனை விட சொல்லிலும், செயலிலும் நேர்மையை வெளிப்படுத்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை மக்கள் ஆதரிப்பது என்பதே சரியான நிலைப்பாடாக அமையும் என எதிர்பார்க்கின்றேன்.


இந்த கருத்தை யாராவது எதிர்க்கமுடியுமானால் அவர்கள் இந்த கருத்தியலை சரியான முறையில் எதிர்த்து தன்னுடைய கருத்தியலை பதிவு செய்யலாம்.

Leave A Reply

Your email address will not be published.