Thoduvanam
24*7 Verified Tamil News

யாழ்.நகரில் பொத்துவில் முதல் பொலிகண்டிவரை நடக்கும் பேரணிக்கு எதிரான விசமிகளின் சதி அம்பலம்

பல தடைகளை தாண்டி பொத்துவில் முதல் பொலிகண்டிவரை நடக்கும் தமிழர் உரிமைக்கான சாத்வீக வழி போராட்டம் இன்று யாழ்.மாவட்டத்தை அடையவுள்ளது.

இந் நிலையில் யாழ்.நகரில் மக்கள் பேரெழுச்சி போராட்டத்திற்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்திற்கு கொரோனா தொற்றை இந்த போராட்டம் கொண்டுவரும் எனவும், தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவற்றை சுட்டிக்காட்டி இந்த பதாகைகள் எழுதப்பட்டுள்ளது.

பாரிய மக்கள் எழுச்சியை கண்டு யாழ்.மாவட்டத்தில் அரசில் கட்சி ஒன்றின் பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய பின்னணியில் தமிழர் உரிமையை வலியுறுத்தும் போராட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் கூச்சல்கள் போடப்பட்ட நிலையில், தற்போது இந்த பதாகைகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.