Thoduvanam
24*7 Verified Tamil News

அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் பலி

அமெரிக்காவில் ஜேர்ஜியா மாநிலம் அட்லாண்டா பகுதியில் அமைந்துள்ள 3 தசை பிடிப்பு நிலையங்களில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் பெரும்பாலனவர்கள் ஆசியாவை சேர்ந்த பெண்கள் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

21 வயதான இளைஞர் ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதுடன் அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஆசிய நாட்டவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞரிடம் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.