Thoduvanam
24*7 Verified Tamil News

முப்பதாயிரம் பேருக்கு மேல் கொரோனா சிகிச்சை

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 99ஆயிரத்து 254ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளாவிய ரீதியில் மூவாயிரத்து 410 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 12 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த ஆயிரத்து 884 பேர் நேற்று வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய நிலையில், மொத்தமாக ஒரு இலட்சத்து 64 ஆயிரத்து 281பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

நாட்டில் மேலும் 48 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 656ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், 33ஆயிரத்து 317 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.