Thoduvanam
24*7 Verified Tamil News

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பாள்புரம் பகுதியில் சட்டவிரோத இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மல்லாவி புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து குறித்த இடத்திற்கு சென்ற விசேட அதிரடிப் படையினர் குறித்த சட்டவிரோத இடியன் துப்பாக்கியையும் அதனை வைத்திருந்த நபரையும் கைது செய்து மாங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.